Ad

Monday, 24 April 2017

Kabali (Mayanathi song)



நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே

ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நான் இழந்தேன்  
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி
வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

யானை பலம் இங்கே - சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்கை திரும்புதே

தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன்
காலமெனும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன்
மணல் ஊரும் மழையாய் மடி மீது விழ வா வா
அணை மீறும் புனலாய் மார் சாய்ந்து அழ வா

மாய நதி இன்று மார்பில் வழியுதே
தூய நரையிலும் காதல் மலருதே

யானை பலம் இங்கே - சேரும் உறவிலே
போன வழியிலே வாழ்கை திரும்புதே...

No comments:

Post a Comment

Enna solla aethu solla by Thangamagan

என்ன சொல்ல, ஏது சொல்ல, கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல! என்னென்னவோ உள்ளுக்குள்ள, வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள! சின்னச் சின்ன...