Ad

Thursday, 27 April 2017

Nenjorathil en nenjorathil ( pichaikaran )

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் 
கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில் 
எந்தன் உயிரோடு கலந்து விட்டாய்

எனக்கு என்னானது 
மனம் தடுமாறுது 
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது ..ஓ  ..

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் 

என் காலடி மண்ணில் பதிந்தாலும் 
நான் நூறடி உயரம் பறக்கிறேன் 
நீ ஓரடி தூரம் பிரிந்தாலும்
என் உயிரில் வழியை உணர்கிறேன் 

புது கொள்ளைக்காரன் நீயோ 
என் நெஞ்சை காணவில்லை 
நான் உன்னை கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை

இடைவெளி குறைந்து இருவரும் இருக்க 
ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க 
என் இந்த ஆசை ஆயிரம் ஆசை 
என்னை மயக்கி விட்டாயே 

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய்

உண் கைகள் தொட்ட இடம் பார்த்து 
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன் 
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும் 
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன் 

உண் கண்ணை உற்று பார்த்தால் 
லட்சம் வார்த்தை சொல்லும் 
அதில் எதோ ஒன்று என்னை 
எங்கோ தூக்கி செல்லும்

ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க 
விரல் நுனி உரசி வீதியை கடக்க 
என் இந்த ஆசை ஆயிரம் ஆசை 
என்னை மயக்கி விட்டாயே 

நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் 

எனக்கு என்னானது 
மனம் தடுமாறுது 
விழி உன்னை தேடித்தான் ஓடுது
தேடுது ..ஓ  ..நெஞ்சோரத்தில்...

No comments:

Post a Comment

Enna solla aethu solla by Thangamagan

என்ன சொல்ல, ஏது சொல்ல, கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல! என்னென்னவோ உள்ளுக்குள்ள, வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள! சின்னச் சின்ன...